2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
சினிமாவில் நுழைந்து பத்து ஆண்டுகளை கடந்துவிட்ட நடிகர் துல்கர் சல்மான் தற்போது தான் முதன் முறையாக 'சல்யூட் என்கிற படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கிய இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். அதுமட்டுமல்ல ஏற்கனவே மும்பை போலீஸ் என்கிற சூப்பர்ஹிட் போலீஸ் படத்தையும் இயக்கியவர்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய படப்பிடிப்பை ஒரேக்கட்டமாக நடத்தி முடித்துள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். கதாநாயகியாக பாலிவுட்டை சேர்ந்த டயானா பென்ட்டி என்பவர் நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது பற்றி துல்கர் சல்மான் கூறும்போது, “சல்யூட் முடிந்தது. அரவிந்த் கருணாகரனுக்கு (படத்தில் துல்கரின் பெயர்) ஒரு சல்யூட்டுடன் பிரியாவிடை கொடுக்கிறேன்..இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக ரோஷன் இயக்குனர் ஆன்ட்ரூஸுக்கு நன்றி. மேலும் இந்தப்படத்தை தயாரிக்கும் வாய்ப்பும் எனக்கே கிடைத்ததில் இன்னும் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.