விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

நாகார்ஜுனா தற்போது தெலுங்கில் நடித்துள்ள 'வைல்டு டாக்' என்கிற படம் இன்று(ஏப்., 2) வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனரான சாலமன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். அண்டர் கவர் ஆபரேஷனை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் நாகார்ஜூனா ஏசிபி விஜய் வர்மா என்கிற ஒரு ரப் அன்ட் டப் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இத்தனை வருடங்கள் சினி பீல்டில் இருந்தாலும் இப்போதும் அவருக்கு முதல் படம் ரிலீசாவது போலவே பதட்டம் ஏற்பட்டு விடுகிறதாம்.
இந்த நிலையில் நேற்று மாலை நடிகர் சிரஞ்சீவியின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் நாகார்ஜுனா.. அவருக்கு விதவிதமான உணவு வகைகளை தன் கையாலேயே சமைத்து சாப்பிட வைத்த சிரஞ்சீவி, கலகலப்பாக பேசி நாகார்ஜுனாவின் டென்சனை போக்கி, அவரை கூல் பண்ணி அனுப்பி வைத்துள்ளார். சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்து, அவர் மனைவி சுரேகா தங்கள் இருவரையும் இணைத்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நாகார்ஜுனா.