சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
விஜய் தேவரகொண்டாவை முன்னணி ஹீரோவாக உயர்த்திய 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கியவர் சந்தீப் வங்கா ரெட்டி. அதன்பிறகு அதன் இந்தி ரீமேக்கான கபீர் சிங்கையும் இயக்கி வெற்றி பெற்றார். இந்தநிலையில் இவர் விரைவில் மகேஷ்பாபுவை இயக்க உள்ளார். ஆனால் அது திரைப்படம் அல்ல, மகேஷ்பாபு நடிக்கவுள்ள விளம்பரப்படம் என்று தெரியவந்துள்ளது.
இந்த விளம்பரப்படத்தை இயக்க சந்தீப் வங்காவை சிபாரிசு செய்ததே மகேஷ்பாபு தானாம். மேலும் ஏற்கனவே மகேஷ்பாபுவை வைத்து சந்தீப் வங்கா ஒரு படம் இயக்க தயாராகி வந்ததும் சில காரணங்களால் அது கைகூடாமல் போனதும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை இந்த விளம்பர படத்தை இயக்குவதன் மூலம், வெள்ளித்திரையிலும் மகேஷ்பாபுவை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கலாமோ என்னவோ..?