டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பாலிவுட் படமான பிங்க் ரீமேக்கான வக்கீல் ஷாப் படத்தில் நடித்து முடித்து விட்டார். அடுத்த மாதம் தியேட்டரில் வெளிவருகிறது. பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்ததாக கிரிஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார், கீரவாணி இசை அமைக்கிறார். வி.எஸ்.ஞானசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். நிதி அகர்வால் ஹீரோயின்.
இதன் பணிகள் 40 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில் படத்திற்கு ஹரிஹர வீரமல்லு என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இது ஒரு சரித்திர படம். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மக்கள் ஹீரோவாக இருந்த வீரமல்லு என்பவரின் வாழ்க்கை கதை. இதனால் பிரமாண்ட செட்டுகள் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் பட்ஜெட் 200 கோடி என்கிறார்கள். ஜூலை மாதத்திற்குள் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் தயாராகி வருகிறது.




