அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு |
கடந்த பத்து வருடங்களில் மலையாள திரையுலகின் இளம் முன்னணி நடிகராக உயர்ந்துவிட்ட துல்கர் சல்மான்,. தற்போது முதன்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் சல்யூட் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்தப்படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். இவர் தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கியவர். அதுமட்டுமல்ல மும்பை போலீஸ் என்கிற சூப்பர்ஹிட் போலீஸ் படத்தையும் இயக்கியவர்.
இந்தப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட்டை சேர்ந்த டயானா பென்ட்டி என்பவர் நடிக்கிறார்.. இவர் லக்னோ சென்ட்ரல், தி ஸ்டோரி ஆப் பொக்ரான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
இந்தநிலையில் நாயகி டயானா பென்ட்டியும் நேற்று முதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து துல்கருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள டயானா, முதன்முறையாக மலையாளத்தில் நடிப்பது, அதுவும் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.