படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
மலையாள இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிக்க வந்து ஒன்பது வருடங்கள் முடிந்து பத்தாம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆச்சர்யமாக இவர் நடித்த முதல் படமான 'செகண்ட் ஷோ'வில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமானவர் சன்னி வெய்ன் என்பவர். இவரும் தற்போது ஹீரோ, குணச்சித்திர நடிகர், வில்லன் என மாறிமாறி நடித்து வருகிறார். ஒரு தயாரிப்பாளராகவும் மாரி நிவின்பாலியை வைத்து படம் தயாரித்து வருகிறார்.
எப்படி தமிழில் விஜய் தான் நடித்த படங்களில் அவ்வப்போது தனது நண்பர்களான ஸ்ரீமன், சஞ்சீவ் ஆகியோர் இருப்பது போல பார்த்துக் கொள்கிறாரோ, அதேபோலத் தான் துல்கர் சல்மானும் தனது நண்பர் சன்னி வெய்னுக்கு தனது படங்களில் வாய்ப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார். இந்தநிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள 'குறூப்' என்கிற படத்திலும் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். இவர்களது நட்பு பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததற்கு வாழ்த்து சொல்லும் விதமாக, இவர்கள் இணைந்துள்ள போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.