'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

மோகன்லால் தற்போது மலையாளத்தில் நடித்து வரும் ஆராட்டு என்கிற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மோகன்லாலை வைத்து வில்லன், மிஸ்டர் பிராடு உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கிய, அவரது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். நெய்யாற்றின்கரை கோபன் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்..
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஸ்படிகம், நரசிம்மம் ஆகிய படங்களில் பார்த்த அதே ஆக்ரோஷமான மோகன்லாலை இந்த படத்தில் மீண்டும் பார்க்கலாம் என, படம் ஆரம்பிக்கும்போதே இயக்குனர் உன்னி கிருஷ்ணன் கூறியிருந்தார்.
இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்தப்படத்தின் போஸ்டரில் மோகன்லாலின் ஆக்சன் லுக்கை பார்த்ததும் அவரது ரசிகர்கள் பரவசமடைந்துள்ளார்கள்.. குறிப்பாக புலிமுருகன் படத்திற்கு பிறகு, தங்களை திருப்திப்படுத்தும் ஆக்சன் படமாக 'ஆராட்டு' இருக்கும் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.




