தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
தமிழ் திரையுலகை போலவே இந்த வருடம் மலையாளத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸ் களைகட்டி இருக்கிறது. ஒரு வாரம் முன்னதாகவே மோகன்லாலின் 'ஒடியன்' படம் வெளியாகிவிட்ட நிலையில், இந்த வாரம் இளம் நடிகர்களின் நான்கு படங்கள் வெளியாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக லால்ஜோஸ், சத்யன் அந்திக்காடு என சீனியர் இயக்குனர்களின் மோதலும் இந்த கிறிஸ்துமஸ் ரிலீஸை பரபரப்பாக இருக்கிறது
இதில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் பஹத் பாசில் நடித்துள்ள ஞான் பிரகாசன், லால்ஜோஸ் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள தட்டின்புரத்து அச்சுதன், ஜெயசூர்யா - ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள பிரேதம்-2 மற்றும் டொவினோ தாமஸின் எண்டே உம்மாண்டே பேரு' என நான்கு படங்களும் வலுவான கூட்டணியுடன் களம் இறங்குகின்றன. கடந்த வாரம் வெளியான ஒடியன் படம் பெரியளவில் சோபிக்காத நிலையில் இந்த வார படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கவே செய்யும் என நம்பலாம்.