மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரபல பத்திரிகையான, போர்ப்ஸ், இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் திரையுலக மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் டாப் - 100 பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், தமிழ் சினிமாவில் இருந்து ரஜினி, விஜய், கமல் உட்பட பலர் இடம்பிடித்துள்ளனர். அதேப்போல் தெலுங்கு திரையுலகில் இருந்து பவன் கல்யாண். ஜூனியர் என்.டி .ஆர், மகேஷ்பாபு உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், ஆச்சர்யமான விஷயமாக மலையாள திரையுலகில் இருந்து மம்முட்டி ஒருவர் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவருக்கு 49வது இடம் கிடைத்துள்ளது. அதிகபட்சம் அவரது வருட வருமானமாக ரூ.18 கோடி என அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மம்முட்டியை விட மோகன்லால் அதிக சம்பளம் வாங்கினாலும் அவர் எண்ணிக்கையில் குறைவான படங்களே நடிப்பதால் இவர் பெயர் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்றே தெரிகிறது.