தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
மோகன்லால் தற்போது நடித்து வரும் 'ஒடியன்' படம் வரும் டிச.,14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரசிகர்களின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பு, பிரமிப்பூட்டும் தியேட்டர் எண்ணிக்கைகள் என மாஸ் ரிலீசாக வெளியாகவுள்ள இந்தபடத்தில் மம்முட்டியின் பங்களிப்பும் இருக்கிறதென்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.
சில நூற்றாண்டுகளுக்கு முன் அதாவது, மின்சார வசதிகள் எல்லாம் எட்டிப்பார்க்காத காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்பதால் இந்தப்படத்தின் கதையை ஆங்காங்கே நகர்த்தி செல்லும் விதமாக மம்முட்டியின் குரல் ஒலித்தால் நன்றாக இருக்கும் என படத்தின் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் கருதினார். மோகன்லால் என்ன மறுப்பு சொல்லவா போகிறார்.? அந்தவிதமாக நேற்று ஸ்டுடியோவுக்கு வந்து இந்தப்படத்திற்காக டப்பிங் பேசிவிட்டு சென்றுள்ளார் மம்முட்டி.
இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ள இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன், இப்போதுதான் இந்தப்படம் முழுமையடைந்த உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.