மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சுதந்திர போராட்ட வீரராக சிரஞ்சீவி நடித்து வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜயசேதுபதி, நயன்தாரா, தமன்னா ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது ஜெகபதிபாபுவும் இணைந்திருக்கிறார்.
இந்த படத்தில் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். இன்று முதல் அவர் சிரஞ்சீவியுடன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. தற்போது சைர நரசிம்ம ரெட்டி யூனிட் ஜார்ஜியாவில் முகாமிட்டுள்ள நிலையில், சிரஞ்சீவி, ஜெகபதிபாபு ஆகிய இருவரும் எதிரும் புதிருமாக மோதிக்கொள்ளும் போர்க்கள காட்சி படமாக்கப்படுகிறது.