‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி எதையும் கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார் நடிகர் நாகசைதன்யா. நடிகர் நாகர்ஜூனாவின் மகன் எனும் அந்தஸ்த்திலயே தனது திரையுலக வாழ்க்கையை நகர்த்தி வரும் நாகசைதன்யா, தற்போது சவ்யசாச்சி என்கிற படத்திலும் சைலஜா ரெட்டி அல்லுடு என்கிற படத்திலும் நடித்துள்ளார்
இந்த இரண்டு படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்து விட்டன என்றே சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி, அவரது சைலஜா ரெட்டி அல்லுடு படம் ரிலீஸ் ஆக இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடியவில்லை என சொல்லப்பட்டு, தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கபட்டுள்ளதாக தெரிகிறது.
அதேபோல நாகசைதன்யாவின் இன்னொரு படமான சவ்யசாச்சி படமும் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாது என்றே சொல்லப்படுகின்றது, இதற்கு முன் இதேபோல தள்ளிப்போய் ரிலீஸ் ஆன நாகசைதன்யாவின் இரண்டு படங்கள் பிளாப் ஆனதால் இந்த படங்களுக்கும் அதே கதி நேருமோ என நாகசைதன்யாவின் ரசிகர்கள் கவலைப்பட்டு வருகிறார்களாம்.