மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழில் வெற்றிவேல், கிடாரி ஆகிய படங்களில் சசிகுமார் ஜோடியாக நடித்தவர் நிகிலா விமல்.. மலையாள நடிகையான இவர், அங்கே அறிமுகமானதே திலீப் ஜோடியாகத்தான் என்றாலும், பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் தமிழுக்கு வந்தார். வந்த ஜோருக்கு சில படங்களில் நடித்ததோடு, தமிழ்சினிமாவுக்கு இவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்தநிலையில் தான் சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் இவர் நடித்த அரவிந்தண்டே அதிதிகள் என்கிற படம் வெற்றிகரமாக ஓட, அதைப்பார்த்து சத்யன் அந்திக்காடு டைரக்சனில் பஹத் பாசிலுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது..
அதை முடித்த கையோடு தற்போது துல்கர் சல்மான் ஜோடியாக ஒரு யமண்டன் பிரேமகாதா என்கிற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள் கிடைத்துள்ளதால் இந்த வருடத்தில் நிகிலா விமலின் மார்க்கெட் சூடு பிடிக்க துவங்கியுள்ளது என்றே சொல்லலாம்.