மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
1996-ல் வெளியான முக்கியமான மலையாள படம் 'காலாபானி'. ப்ரியதர்சன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாள படமும் அதுதான்!
காலாபானி படத்தை தமிழில் 'சிறைச்சாலை' என்ற பெயரில் கலைப்புலி தாணு வெளியிட்டார். 'காலாபானி' வெளியாகி 22 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் மோகன்லாலுடன் இணைந்து ஒரு மலையாளப்படத்தில் நடிக்கிறார் பிரபு.
ப்ரியதர்சன் இயக்கும் அந்தப்படத்துக்கு 'மரக்கார் - அரபி கடலின்டே சிம்ஹம்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கேரளாவில் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய குஞ்சாலி மரக்கார் என்ற சுதந்திரப்போராட்ட வீரர் பற்றிய சரித்திர படமாம் இது.
மோகன்லால், பிரபுவுடன் மற்றும் சில தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்பட கலைஞர்களுடன் ஹாலிவுட் கலைஞர்களும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை கடலில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். க்ரீன்மேட் பின்னணியில் ஒரு ப்ளோர் முழுக்க தண்ணீரை நிரப்பி கடலைப்போல் செட் போடவும் உள்ளனர்.!