ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
தமிழ் சினிமாவில் ரம்யாகிருஷ்ணனுக்கு பெரிய அடையாளம் கொடுத்த படம் ரஜினியின் படையப்பா. இந்த படத்தில் அவர் நடித்த நெகட்டிவ் ரோல் இப்போதுவரை பேசப்பட்டு வருகிறது. அதன்பிறகு பல படங்களில் அவர் நடித்தபோதும் அந்த படம் அளவுக்கு எந்த படமும் ரம்யாகிருஷ்ணனுக்கு பெயர் வாங்கிக்கொடுக்கவில்லை. பாகுபலி மட்டும் ரம்யா கிருஷ்ணனின் மற்றொரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது.
இந்தநிலையில், தற்போது தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் சைலஜா ரெட்டி அல்லுடு என்ற படத்தில் அவரது மாமியார் வேடத்தில் நடிக்கிறார். ஆனபோதும் மருமகனுக்கும், மாமியாருக்குமிடையே நடக்கும் ஈகோ போர் சம்பந்தப்பட்ட கதையாம். அதனால், மீண்டும் தனது அதிரடியான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி வருகிறார் ரம்யாகிருஷ்ணன்.
மேலும், இதே ரம்யாகிருஷ்ணன் இதற்கு முன்பு நாகசைதன்யாவின் தம்பி அகில் நடித்த ஹலோ படத்தில் அவரது அம்மா வேடத்தில் நடித்திருந்தார்.