மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கன்னட நடிகர் சுதீப் நடித்த கொட்டிகோபா அவரது கேரியரில் முக்கியமான படம். இதன் இரண்டாம் பாகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தயாரானது. இதனை கே.எஸ்.ரவிகுமார் இயக்கினார். சுதீப் ஜோடியாக நித்யா மேனன் நடித்தார். இந்தப் படம் தமிழில் முடிஞ்சா இவனப்புடி என்ற பெயரில் வெளிவந்தது. இந்தப் படமும் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து இதன் மூன்றாம் பாகம் தயாராக இருக்கிறது. இதில் சுதீப் ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடிக்கிறார். மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் இவர். தமிழில் கவண், பவர் பாண்டி, காதலும் கடந்து போகும் படங்களில் நடித்தார். தற்போது விஜய் சேதுபதியுடன் ஜுங்கா படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஏற்கெனவே அறிமுகமாகிவிட்ட மடோனா இந்தப் படத்தின் மூலம் கன்னடத்திலும் அறிமுகமாகிறார். கொட்டிகோபா 3ம் பாகத்தை புதுமுக இயக்குனர் சிவகார்த்தி இயக்குகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.