‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாள திரையுலகில் முன்னணி குணச்சித்திர நடிகராக இருப்பவர் ஹரீஷ் பெராடி. இவர் தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான 'கிடாரி', விஜய்சேதுபதியின் 'ஆண்டவன் கட்டளை', விக்ரம் வேதா', ஸ்பைடரில் உயர் அதிகாரி, மெர்சலில் வில்லன் என முக்கியமான படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தவர்.
கடந்த சில வருடங்களுக்கு முன் நேரடியாக குணச்சித்திர நடிகரான அறிமுகமான இவர், தற்போது கதாநாயகனாக மாறியுள்ளார். ஆம், மலையாளத்தில் தற்போது உருவாகிவரும் 'பாயல் குஞ்சுன்னி' என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். கொடூரமான வில்லனாக இதுவரை காட்சியளித்த இவரின் முற்றிலும் வேறான மறுபக்கத்தை இந்தப்படத்தில் காட்டியுள்ளாராம் இந்தப்படத்தின் இயக்குனர் அகில்.