'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
மலையாளத்தில் நயன்தாரா நடித்த புதிய நியமம் படம் வெளியாகி இரண்டு வாருடங்கள் ஓடிவிட்டன. அதன்பின் தமிழ், தெலுங்கில் பிசியான நயன்தாரா மீண்டும் மலையாளத்தில் 'லவ் ஆக்சன் டிராமா' மற்றும் 'கோட்டயம் குர்பானா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் லவ் ஆக்சன் டிராமா படத்தை நடிகர் வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் என்பவர் இயக்குகிறார்..
டைரக்சன் துறைக்கு இவர் புதியவர் என்றாலும் இவர் வி.ஐ.பி குடும்பத்து வாரிசு என்பதால் இவரிடம் போனிலேயே கதை கேட்க சம்மதித்தார் நயன்தாரா. அதிலும் '30 நிமிடம் தான் நேரம் ஒதுக்க முடியும். அதற்குள் இந்த கதை எனக்கு பிடித்துவிட்டால் ஒகே.. இல்லாவிட்டால் என் மீது வருத்தப்படாதீர்கள்' என சற்று கறாராகவே கூறினாராம்.
ஆனால் தயன் சீனிவாசன் கதை சொல்ல ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே தான் நடிப்பதற்கு ஒகே சொல்லிவிட்டாராம் நயன்தாரா. அதன்பின் மீதி இருபது நிமிடங்களும் கதையை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாராம் நயன்தாரா. நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என முதல் சாய்ஸாக கூறிய ஹீரோ நிவின்பாலிக்கும், இணை தயாரிப்பாளர் அஜூ வர்கீசுக்கும் அப்போது தான் போன உயிர் திரும்பி வந்ததாம்.