விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
தற்போது தனுஷ் வடசென்னை, மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் எந்தப்படமும் தற்போது ரிலீசாவதற்கான சாத்தியங்கள் எதுவும் இல்லை. அதேசமயம் தனுஷ் மலையாளத்தில் தற்போது மரடோனா என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இந்தப்படம் தான் வரும் மே மாதம் ரிலீசாக இருக்கிறது..
மினி ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனமும், தனுஷின் வுண்டர்பார் நிறுவனமும் சேர்ந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றன. தனுஷின் முதல் மலையாள தயாரிப்பான 'தரங்கம்' படத்தில் ஹீரோவாக நடித்த டொவினோ தாமஸ் தான் இந்தப்படத்திலும் ஹீரோ. ஷர்மிளா நாயர் என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
விஷ்ணு நாராயணன் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் திலீஷ் போத்தன், ஆஷிக் அபு, சமீர் தாஹிர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.