‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் நடன இயக்குனராக வலம்வருபவர் கலா மாஸ்டர். மற்ற மொழிகளிலும் கலா மாஸ்டரின் ஆட்டுவிப்புக்கு ஆடாத நட்சத்திரங்கள் யாரும் இருக்க முடியாது. அந்தவகையில் தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடித்துவரும் 'ஒடியன்' படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு கலா மாஸ்டர் நடனம் அமைத்து வருகிறார்..
இந்த பாடல் காட்சி கடந்த சில நாட்களாக கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி அருவி பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. மோகன்லால், மஞ்சு வாரியர் இடம்பெறும் இந்தப்பாடல் காட்சி வழக்கமான ஒரு பாடல் போல இருக்காதாம். மோகன்லாலின் ஸ்லிம்மான தோற்றத்தையும் படத்தில் மோகன்லாலின் 'ஒடியன்' கெட்டப்பையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு போனாராம் கலா மாஸ்டர்.
கடந்த 2௦௦௦ல் மலையாளத்தில் வெளியான 'கொச்சு கொச்சு சந்தோஷங்கள்' என்கிற படத்தில் சிறந்த நடன அமைப்பிற்காக கலா மாஸ்டர் தேசிய விருது வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.