மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஜெயராம் மகன் காளிதாஸ் மலையாளத்தில் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் 'பூமரம்'. நிவின்பாலியை வைத்து 1983 மற்றும் ஆக்சன் ஹீரோ பிஜூ என இரண்டு ஹிட் படங்களை இயக்கிய அப்ரிட் ஷைன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இழுபறி நிலையில் இருந்து வந்த இந்தப்படம் இன்று ஒரு வழியாக ரிலீஸாகியுள்ளது.
கேரளாவில் சுமார் 123 தியேட்டர்களில் இந்தப்படம் வெளியாகியுள்ளது. இதனால் காளிதாஸ் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். மலையாளத்தில் இந்தப்படம் காளிதாஸுக்கு நல்லதொரு அறிமுகத்தை தருவதை பொறுத்துதான் அவரது சினிமா கேரியர் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்ல, இரண்டு ஹிட் கொடுத்துள்ள அப்ரிட் ஷைன் இந்தப்படத்தின் மூலம் ஹாட்ரிக் அடிப்பார் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதேப்போல இன்னொரு வாரிசு நடிகரான, சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் நடித்துள்ள 'இறா' என்கிற படமும் இன்று வெளியாகியுள்ளது.