ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நித்யா மேனன். அதன்பிறகு தெலுங்கில் நானி தயாரித்த அவே படத்தில் காஜல் அக்வாலுடன் இணைந்து இன்னொரு நாயகியாக நடித்தார். அந்த படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் படத்தில் என்டிஆரின் மனைவி பசவதாரகாம் வேடத்தில் நித்யாமேனன் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அந்த செய்தியை அவர் மறுத்துள்ளார்.
நித்யாமேனன் விடுத்துள்ள செய்தியில், என்டிஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டேன். அதற்கான காரணத்தையும் பாலகிருஷ்ணா மற்றும் தேஜாவை சந்தித்து கூறிவிட்டேன் என்று கூறியுள்ள நித்யாமேனன், அடுத்த ஆண்டு நான் ஒரு படத்தை இயக்கி நடிக்கப்போகிறேன். அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.