மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சமீபத்தில் நிவின்பாலி, த்ரிஷா இணைந்து நடித்த 'ஹே ஜூடு' படம் மலையாளத்தில் வெளியானது. த்ரிஷா மலையாளத்தில் நடித்துள்ள முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பீல்குட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் நிவின்பாலியின் நடிப்புக்கு இணையாக த்ரிஷாவும் மாறுபட்ட நடிப்பை வழங்கியுள்ளார்.
இந்தப்படம் படக்குழுவினரால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு நேற்று கொச்சியில் உள்ள லுலு மாலில் படத்தின் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளனர். இதில் பார்வதி, புலி முருகன் இயக்குனர் வைசாக் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஆனால் படத்தின் நாயகி த்ரிஷா வேறு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் இதில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.