‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தெலுங்கு சினிமாவில் அதிரடி ஆக்சன் மற்றும் ரொமான்டிக் கதைகளாக நடித்து வருபவர் ஜூனியர் என்டிஆர். இந்த நிலையில், ஜெய்லவகுசா படத்தில் மூன்று வேடங்களில் நடித்த ஜூனியர் என்டிஆர், அடுத்தபடியாக ஒரு முழுநீள காமெடி படத்தில் நடிக்கப்போகிறார்.
இந்த படத்தை திரிவிக்ரம் இயக்குகிறார். ஆக்சன், செண்டிமென்ட் என எந்தமாதிரியான கதைகளில் படம் இயக்கினாலும் அதை காமெடி கலந்தே இயக்கக்கூடியவர் திரிவிக்ரம். அந்த வகையில், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தை குடும்ப பொழுதுபோக்கு கதையில் இயக்குகிறார். கூடவே இந்த படத்தில் காமெடியை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகவே கலந்து கதை பண்ணியிருக்கிறாராம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.