'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
குழந்தைகளை டார்கெட் பண்ணி, 'புரபெஷர் டிங்கன்' என்கிற படத்தில் நடிக்கிறார் மலையாள நடிகர் திலீப். ரபி மெக்கார்டின் கதை எழுதும் இந்தப்படத்தில் மேஜிக் மேனாக நடிக்கிறார் திலீப். சுமார் 125 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்.
இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்திருந்த சமயத்தில் தான் நடிகை விவகாரத்தில் கைதாகி சிறை சென்றார் திலீப். ஜாமீனில் விடுதலையாகி வந்ததும் தன்னுடைய இன்னொரு படமான 'கம்மார சம்பவம்' படத்தின் மீதி படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த திலீப், வரும் பிப்ரவரியில் 'புரபெஷர் டிங்கன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்தப்படத்தில் தனது மிகப்பெரிய மேஜிக்கால் இந்த உலகத்தை தன் கைக்குள் கொண்டுவர நினைக்கிறார் திலீப். ஆனால் எதிர்பாராத விளைவுகள் ஏற்பட, மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். பின்னர் தன்னுடைய சின்னச்சின்ன மேஜிக்குகளால் அவர்களது கஷ்டங்களை போக்க முயற்சிக்கிறாராம். இந்தப்படம் 3டியில் உருவாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.