‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தெலுங்கில் பல படங்களில் நடித்திருப்பவர் லட்சுமி மஞ்சு. நடிகர் மோகன்பாபுவின் மகளான இவர், தமிழில் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடித்தார். ஆங்கில படங்களிலும் நடித்து வரும் லட்சுமி மஞ்சு, தற்போது ஹாலிவுட்டில் தயாராகியுள்ள பாஸ்மதி ப்ளூஸ் என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் ப்ரி லார்சன், டொனால்ட் சதர்லாண்ட் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். கேரளாவை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், அரிசி விற்பனை செய்ய வரும் இளம் விவசாயிக்கும், லட்சுமி மஞ்சுவிற்கும் உருவாகும் காதலை மையப்படுத்தி தயாராகியிருக்கிறது. இந்த படத்தில் லட்சுமி மஞ்சு சீதா என்கிற கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார். டான் பரோன் இயக்கியுள்ள இப்படம், பிப்ரவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது.