ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2015-ல் வெளியான படம் தான் 'சார்லி'. வாழ்க்கையை எந்தவித டென்சனும் இல்லாமல் ஒவொரு நிமிடங்களையும் மகிழ்ச்சியானதாக, பிறருக்கு பயனுள்ளதாக வாழ நினைக்கும் கதாபாத்திரம் தான் சார்லி. இந்தப்படத்தை பார்த்துவிட்டு வந்தவர்கள் அனைவரும் இதில் 'சார்லி'யாக நடித்திருந்த துல்கரின் நடிப்பை ஆஹா ஓஹோவென புகழ்ந்தார்கள்..
தற்போது மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் ஜீத்து ஜோசப் டைரக்சனில் 'ஆதி' என்கிற படத்தில் அறிமுகமாகிறார். படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டில் அவரது இயல்பான குணங்களை நேரில் கண்ட குணச்சித்திர நடிகரான சிஜாய் வர்கீஸ் என்பவர் 'ரியல் லைப் சார்லி' என்றால் அது பிரணவ் தான் என வியந்து பாராட்டியுள்ளார்.
“பிரணவின் வெள்ளந்தியான குணமும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனதும் எந்த ஒரு விஷயத்திற்கும் அலட்டிக்கொள்ளாத அவரது பக்குவமும் அவரை நிஜமான 'சார்லி'யாகவே எனக்கு தோன்ற வைத்தது” என சிஜாய் வர்கீஸ் குறிப்பிட்டுள்ளார்.