‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்தியத் திரையுலகில் தமிழ்ப் படங்களின் டீசர், டிரைலர் ஆகியவை புரியும் சாதனையை ஹிந்தி, தெலுங்குப் படங்களின் டீசர்கள் கூடப் புரிவதில்லை. தமிழிலிருந்து பல படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வருகின்றன. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலரின் படங்கள் தெலுங்கில் வெளியாவது வழக்கம். அவர்களது படங்களின் டீசர்கள் தெலுங்கில் இதுவரை பெரிய சாதனைகளைப் புரியாமல் இருந்து வந்தது.
ஆனால், சூர்யா தமிழில் நடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'கேங்' டீசர் சில நாட்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான சில நாட்களிலேயே அந்த டீசர் நேரடித் தெலுங்குப் படங்களின் டீசர்களின் சாதனையை முறியடித்துள்ளது. இதுவரை தெலுங்கில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசராக சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த ஜுனியர் என்டிஆர் படமான 'ஜெய் லவகுசா' படம்தான் பெற்றிருந்தது. அந்த டீசர் பெற்ற லைக்குகள் 2,81,000 க்கும் கொஞ்சம் அதிகம். 1 கோடியே 91 லட்சம் பார்வைகளில் அந்த லைக்குகளை டீசர் பெற்றுள்ளது.
அதே சமயம் சூர்யாவின் 'கேங்' பட டீசர் 3 லட்சம் லைக்குகளை சில நாட்களிலேயே கடந்துள்ளது. அதையும் 14 லட்சத்திற்கம் கொஞ்சம் அதிகமான பார்வைகளிலேயே பெற்றுவிட்டது. தெலுங்குப் பட வரலாற்றில் நேரடிப் படங்களின் லைக்குகளை விடவும் டப்பிங் படம் ஒன்று அதிக லைக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
ஆனால், இந்த சாதனை தொடருமா என்பது இன்று தெரிந்துவிடும். பவன் கல்யாண் நடித்துள்ள 'அஞ்ஞாதவாசி' படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது. இதுவரை வெளிவந்துள்ள தெலுங்குப் படங்களின் டீசர்களை எல்லாம் முறியடிக்க வேண்டும் என்ற வேகத்தில் பவன் கல்யாண் ரசிகர்கள் உள்ளனர். 'அஞ்ஞாதவாசி' எப்படி அதிர வைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.