‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கொஞ்சம் வெயிட்டான, போல்டான கேரக்டர்கள் என்றால் பெரும்பாலான மலையாள இயக்குனர்களின் சாய்ஸாக இருப்பவர் நடிகை ஷிவதா நாயர் தான். அந்தவகையில் 'சூ சூ சுதி வாத்மீகம்', லக்ஷ்யம் ஆகிய படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய ஷிவதா, தற்போது அதே போன்றதொரு வேடத்தில், குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக 'சிகாரி சாம்பு' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து, தற்போது உருவாக இருக்கும் 'சாணக்ய தந்திரம்' படத்தில் ஒரு மிகப்பெரிய கம்பெனியின் சி.இ.ஓ ஆக, முக்கியமான முடிவுகளை அதிரடியாக எடுக்கும் துணிச்சல் மிகுந்த பெண் கேரக்டரில் நடிக்க இருக்கிறார் ஷிவதா.