தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமான தமன், தற்போது தமிழ், தெலுங்கில் பிசியாக இசையமைத்து வருகிறார். தமிழை விட தெலுங்கில் அதிகப்படியான படங்களுக்கு இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவில் இவருக்கும், தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் பலத்த போட்டி நடந்து கொண்டிருக்கிறது. சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறர் தமன்.
தற்போது ராம்சரண் நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அவர். போயாபதி ஸ்ரீனு இயக்கும் அந்த படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
இதனிடையே ஹிந்தியில் வெளியான கோல்மால் படத்திற்கு இசையமைத்து பாலிவுட்டில் அறிமுகமான தமன், அடுத்தபடியாக டெம்பர் தெலுங்கு படத்தின் ஹிந்தி ரீமேக் படத்திற்கும் இசையமைக்கிறார். ஜூனியர் என்டிஆர் நடித்திருந்த வேடத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கிறார். அடுத்த ஆண்டு இந்த படம் தொடங்குகிறது.