‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறியவர் தான் தெலுங்கு நடிகர் சுனில். அது கூட இயக்குனர் ராஜமவுலி, சிறிய நடிகர்களை வைத்து சின்ன பட்ஜெட்டிலும் கூட தன்னால் வெற்றிகொடுக்க முடியும் என நிரூபிக்க இறங்கிய முயற்சியின் காரணமாக, அவர் இயக்கிய 'மரியாத ராமண்ணா' படத்தின் மூலம் அதிர்ஷ்டத்தால் ஹீரோவானவர் சுனில்.
ஆனால் சமீபகாலமாக சுனிலின் படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. இதனால் இவரை வைத்து 'சதுரங்க வேட்டை' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்திருந்த தயாரிப்பாளர் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் என்பவர், அந்த முடிவை மாற்றிக்கொண்டு வேறொரு ஹீரோவை தேடி வருகிறாராம்.