‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
உயர்கல்வி மற்றும் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில் திடீரென சினிமா பிரபலங்கள் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டு சர்ச்சையை கிளப்புவது அவ்வப்போது நடக்கும். ஆனால் ஆந்திராவில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பற்றி புராஜக்ட் ஒர்க் செய்து வருமாறு குழந்தைகளிடம் வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த புராஜக்ட் ஒர்க் பற்றிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவ, என்ன இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான் என கண்டன கருத்துக்கள் அதிகம் எழுந்துள்ளன.