மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மோகன்லால் மகன் பிரணவ் தற்போது 'ஆதி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இசை மற்று ஆக்சன் என இரண்டையும் மிக்ஸ் செய்து ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்தப்படத்தை, 'த்ரிஷ்யம்', 'பாபநாசம்' புகழ் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார். அதிசயமாக முதல் படத்திலேயே பிரணவுக்கு ஜோடி இல்லை, அதனால் லவ், டூயட் எதுவுமில்லை.
இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. மோகன்லாலின் சொந்த நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ்தான் இந்தப்படத்தை தயாரித்து வருகிறது. இந்தப்படத்தை வரும் ஆண்டு குடியரசு தினத்தன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த விஷயத்தில் ஒரு சென்டிமென்ட்டும் அடங்கியுள்ளதாம்.
கடந்த 2000ஆம் ஆண்டில் இதே ஜனவரி-26ஆம் தேதி தான் மோகன்லால் நடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான 'நரசிம்ஹம்' படம் ரிலீசானது. அதுமட்டுமல்ல மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனமே இந்தப்படத்தை தயாரித்ததன் மூலமாகத்தான் வெற்றிகரமாக அடி எடுத்தும் வைத்தது. அதனால் மோகன்லாலின் மகன் படத்தையும் இதே தேதியில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுத்துள்ளார்களாம்.
நல்ல விஷயம் தான். ஆனால் ஒரு அறிமுக ஹீரோவின், அதுவும் வாரிசு ஹீரோவின் படம் ஓரளவு நன்றாக ஓட வேண்டும் என்றால் ரிலீசாகும் நேரத்தில் போட்டிக்கு மிகப்பெரிய படங்கள் இல்லாமல் இருப்பது மிக முக்கியம்.. ஆனால் அதே ஜன-26ல் தான் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள '2.O' படம் வெளியாக இருக்கிறது. ரஜினி படம் வெளியாகும் நாட்களில் கேரளாவில் உள்ள தியேட்டர்களில் 75 சதவீதம் தியேட்டர்கள் ரஜினியின் கைகளுக்கு போய்விடும்..
அதனால் பிரணவின் படத்திற்கு அதிக அளவில் தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை. அப்படி ஓரளவு தியேட்டர்கள் கிடைத்தாலும் ரஜினி அலை பிரணவின் அறிமுகத்தை அமுக்கிவிடும் அபாயமும் இருக்கிறது. இப்போது தீபாவளிக்கு கேரளாவில் விஜய்யின் மெர்சல் வெளியானதற்கே, மோகன்லால் தனது 'வில்லன்' படத்தை பத்து நாட்கள் கழித்து வரும் அக்-27க்கு தள்ளிவைத்து ரிலீஸ் செய்கிறார். அதனால் சென்டிமென்ட் விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ரஜினி படம் ரிலீசாகும் நாளில், தனது மகன் பிரணவ் படத்தை ரிலீஸ் செய்யமாட்டார் என்றே தெரிகிறது.