மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ராம்சரண்-சமந்தா நடித்து வரும் படம் ரங்கஸ்தலம். மித் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சாகர் இயக்கி வருகிறார். இந்த படம்1980 களில் நடக்கும் கதையில் உருவாகிறது. சுகுமார் இந்த படத்திற்காக செட் அமைத்துள்ளார். இந்த படத்திற்காக 1980களில் பயன்படுத்துப்பட்டு வந்த குளிர்பானங்கள், மண் பாத்திரங்கள், குடிசைகள், காளை வண்டிகள், பல்தூள், பவுடர் என அனைத்தும் அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டதை இந்த படத்தில பயன்படுத்தி வருகிறார்களாம்.
இதுபற்றி ராம்சரண் கூறுகையில், இந்த ரங்கஸ்தலம் படத்திற்காக கோதாவரி டெல்டா பகுதியில் உள்ள கிராமத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. அங்கு போடப்பட்டுள்ள கிராமத்து செட்டைப்பார்க்கையில், எனது பள்ளிப்பருவத்தை மீண்டும் நேரில் கொண்டு வந்ததைப் போல் உள்ளது. அதனால் நானும் பள்ளிக்கூட மனநிலைக்கு சென்று குழந்தை மனதுடன் இந்த படத்தில் நடித்து வருகிறேன் என்கிறார் ராம்சரண்.