‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட்டான 'பிரேமம்' என்கிற தனது முதல் படத்திலேயே மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் மனதில் தங்கிவிட்டவர் மடோனா செபாஸ்டியன் அதை தொடர்ந்து தமிழில் விஜய்சேதுபதியுடன் இணைந்து இரண்டு படங்கள், தனுஷுடன் ஒரு படம் என நடித்துவிட்ட மடோனாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியும் என பார்த்தால் அப்படி ஏதும் நடக்கவில்லை.. அவரது சொந்த ஊரான மலையாளத்தில் கூட கடந்த வருடம் திலீப்புடன் நடித்த கிங் லையர் படத்தை தொடர்ந்து புதிய படம் எதிலும் மடோனா ஒப்பந்தமாகவில்லை.
கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டேன் என மடோனா கண்டிசன் போடுவதாலேயே அவருக்கு படங்கள் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் மலையாளத்தில் இளம் நடிகர் ஆசிப் அலிக்கு ஜோடியாக 'இப்லிஸ்' என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மடோனா. ஏற்கனவே ஆசிப் அலி-பாவனாவை வைத்து 'அட்வென்ச்சர்ஸ் ஆப் ஓமனக்குட்டன்' என்கிற படத்தை இயக்கிய ரோஹித் வி.எஸ் என்பவர் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். முழுநீள நகைச்சுவை படமாக இது உருவாக இருக்கிறதாம்.