இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள படம் மெர்சல். அனைவருக்கும் இலவச மருத்துவம் வேண்டும் என்கிற கருத்தினை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மருத்துவம் எப்படியெல்லாம் வியாபாரமாகி விட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், விஜய் நடித்த துப்பாக்கி உள்பட பல படங்கள் தெலுங்கிலும் ஓரளவு வசூலித்ததால், மெர்சல் படத்தையும் அதிரின்டி என்ற பெயரில் தெலுங்கில் வெளியிடுகிறார்கள். இந்த படத்தையும் தீபாவளி அன்றே வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் சென்சார் பிரச்னையால் ரிலீஸ் தேதியை மாற்றினார்கள். இந்த நிலையில், தற்போது அதிரின்டி அக்டோபர் 26-ந்தேதி தெலுங்கில் வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.