எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
துல்கர் சல்மான் நடித்துள்ள சோலோ படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்தநிலையில் பாலிவுட்டிலும் முதன்முதலாக அடியெடுத்து வைத்துள்ள துல்கர், 'கர்வான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஆகர்ஷ் குரானா என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
தவிர இந்தப்படத்தில் இர்பான்கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக மிதிலா பார்க்கர் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷுடன் 'புரூஸ்லீ' படத்தில் கதாநாயகியாக நடித்த க்ரீத்தி கர்பந்தா துல்கருக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
இந்தப்படம் வெவ்வேறு வாழ்க்கை பின்னணியில் இரண்டு நண்பர்களை பற்றிய கதையாக உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் நடைபெற்று தற்போது இன்னும் ஓரிரு தினங்களில் முடிவடைய இருக்கிறது.
இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள நாயகி மிதிலா பார்க்கர், படப்பிடிப்பு முடியப்போவதை நினைத்து இப்போதே அழுகை அழுகையாய் வருவதாக கூறியுள்ளார். மேலும் துல்கர், இர்பான் இருவரும் படப்பிடிப்பின் போது காட்டிய அன்பும் நட்பும் மறக்க முடியாதது என்றும், இருவரிடமும் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என்றும், வாழ்க்கையில் நினைத்து மகிழத்தக்க இனிய நினைவுகள் இந்தப்படத்தின் மூலம் தனக்கு கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார் மிதிலா பார்க்கர்.