'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 | 'மதராஸி' வரவேற்பு : 'மாலதி' ருக்மிணி நன்றி | ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! |
நித்யா மேனன் நடிப்பில் அவரது அடுத்த படமாக, விஜய்யுடன் அவர் இணைந்து நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இந்தநிலையில் மலையாளத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் நித்யா மேனன். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உட்பட நான்கு மொழிகளில் தயாராகும் இந்தப்படத்திற்கு 'ப்ரண' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை பிரபல இயக்குனர் வி.கே.பிரகாஷ் இயக்குகிறார்.
இவருடைய டைரக்சனில் ஏற்கனவே கன்னடத்தில் 'ஐடோன்ட்ல ஐது' மற்றும் மலையாளத்தில் பாப்பின்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ள நித்யா மேனன், இப்போது மூன்றாவது முறையாக வி.கே.பிரகாஷ் டைரக்சனில் நடிக்கிறார். இதற்குமுன் கடைசியாக மலையாளத்தில் 2015ல் துல்கருடன் இணைந்து '100 டேஸ் ஆப் லவ்' என்கிற படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.