பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் கடந்த 18ம் தேதி வெளியான படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஜவஹர் இயக்கிய இந்தப் படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உட்பட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் ஷோபனா என்ற கேரக்டரில் வரும் நித்யா மேனனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தனுசை ஒரு தலையாக காதலித்து பின்னர் அதில் வெற்றி பெறுவது மாதிரியான கதை. இந்த படத்தில் அவர் தனுசுக்கு அடிக்கடி அட்வைஸ் செய்வதால் அவரை தாய்கிழவி என அழைத்து ஒரு பாடல் படத்தில் இடம் பெறுகிறது.
இதனால் சமூக வலைத்தளங்களில் நித்யா மேனனை பலரும் தாய்கிழவி என்றே குறிப்பிடுகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் அவரை தாய்கிழவி என்று அழைக்க நித்யா மேனன் கடுப்பானர். என்னை தாய்கிழவி என்று அழைக்காதீர்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. அந்த படத்தின் கேரக்டர் அது, அதனை அத்தோடு விட்டு விடுங்கள்” என்று அந்த ரசிகருக்கு பதிலளித்தார்.