இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்குப்பிறகு நடனத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் விஜய். சின்னச்சின்ன அசைவுகளைகூட அவர் அற்புதமாக வெளிப்படுத்துவதால், அவரது நடனத்திற்கான ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். அதோடு, சினிமாத்துறையிலும் விஜய்யின் நடனத்திற்கு ரசிகர்கள் அதிகம். தமிழ் சினிமாவையும் கடந்து தெலுங்கு சினிமா நடிகர்களையும் தனது நடனத்தினால் கவர்ந்து வருகிறார் விஜய்.
அந்த வகையில், தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆர், ரஜினியின் தீவிரமான ரசிகர். அதேசமயம் விஜய்யின் நடனத்திற்கும் அவர் ரசிகராம். விஜய்யின் நடனத்திற்காக அவரது படங்களை பார்த்து ரசிப்பாராம் ஜூனியர் என்டிஆர். அந்த வகையில், விஜய் நடித்த வசந்தமுல்லை பாடலில் அவரது நடனம் ஜூனியர் என்டிஆருக்கு ரொம்ப பிடித்து விட்டதாம். அதனால் தெலுங்கில் தான் நடித்த கான்ட்ரி என்ற படத்தின் பாடலில் விஜய்யின் நடனத்தை தான் காப்பி அடித்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் ஜூனியர் என்டிஆர்.