Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தனுஷின் மலையாள பட டிரைலர் வெளியானது

16 செப், 2017 - 15:04 IST
எழுத்தின் அளவு:
Dhanushs-Malayalam-movie-trailer-released

ஒரு தயாரிப்பாளராக மலையாள திரையுலகம் பக்கமும் தனது பார்வையை திருப்பியுள்ள தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் ஒரே ஹீரோவை வைத்து இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். அதில் ஒன்று 'தரங்கம்.. இன்னொரு படம் 'மரடோனா'.. இதில் தரங்கம்' படத்தின் பணிகள் நிறைவுற்று பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆரம்பித்து, டீசர் வரை வெளியிட்டு விட்டார்கள்.. படத்தின் கதாநாயகனாக மலையாள சினிமாவின் வளர்ந்துவரும் ஹீரோவான டொவினோ தாமஸ் நடிக்கிறார். இவர் தவிர இன்னொரு நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மலையாள இளம் நடிகரான உன்னி முகுந்தன்.. கதாநாயகியாக சாந்தி பாலச்சந்திரன் என்பவர் நடிக்கிறார்.

டோமினிக் அருண் என்பவர் இயக்கும் இந்தப்படத்திற்கு கோபிசுந்தர் இசையமைக்கிறார். தற்போது லேட்டஸ்ட்டாக இந்தப்படத்தின் டிரைலரையும் வெளியிட்டுள்ளார்கள். புதிதாக வேலைக்கு சேர்ந்த இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள், தங்கள் பணியில் செய்யும் குளறுபடிகளும், அதனால் அவர்கள் சஸ்பென்ட் செய்யப்படுவதும் அதை தொடர்ந்து நடக்கும் களேபரங்களும் தான் படத்தின் கதை. இந்த கான்ஸ்டபிள்களாக டொவினோ தாமஸும் காமெடி நடிகர் பாலு வர்கீசும் நடித்துள்ளனர். இந்தப்படத்தை மினி ஸ்டுடியோ என்கிற மலையாள நிறுவனம் தனுஷுடன் இணைந்து தயாரித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in