‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஹிந்தியில் பல படங்களில் நடித்தவர் ஸ்ரத்தா கபூர். இவர் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 10-ந்தேதி முதல் தொடங்குகிறது. இப்படத்தில் ஸ்ரத்தா கபூருக்கு முக்கியமான வேடம்.
ஸ்ரத்தா கபூருக்கு ஓரிரு தெலுங்கு வார்த்தைகள்கூட பேசத் தெரியாது. அதனால் என்னதான் அவருக்கு டப்பிங் வேறு நபர் பேசினாலும், டயலாக் பேசும்போது அந்த வார்த்தைகளின் உச்சரிப்பு சரியாக வெளிப்படவில்லையென்றால் டப்பிங் பட எபெக்டே இருக்கும் என்பதால், இப்போது அவருக்கு அந்த படத்தின் டயலாக்குகளை தெலுங்கில் எப்படி உச்சரிப்பது என்று பயிற்சி கொடுத்து வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் நடிப்பதற்கு ஹிந்தியில் ஸ்ரத்தா கபூர் வாங்கும் சம்பளத்தில் இருந்து மூன்று மடங்கு அதிகமாக கொடுக்கப்படுகிறதாம்.