மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பெங்களூருவில் நேற்று நடந்த சாலை விபத்தில் கன்னட டி.வி நடிகர் ஜீவன், நடிகை ரக்ஷ்னா ஆகியோர் மரணம் அடைந்தனர். இதுபற்றிய விபரம் வருமாறு:
மதுபாலா, மகாநதி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் ரக்ஷ்னா, சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி நடத்தி வருகிறவர் ஜீவன். ரக்ஷ்னாவும், ஜீவனும் நண்பர்கள். இவர்களும், இவர்களது நண்பர்கள் 5 பேரும் சேர்ந்த ஒரே காரில் நேற்று நண்பர் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாட மங்களூரில் உள்ள குக்கே சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சென்றனர்.
பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் காரில் புறப்பட்டனர். அதிகாலை 2 மணியளவில் இவர்கள் நெல மங்களா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் முன் இருக்கையில் இருந்த ஜீனும், ரக்ஷ்னாவும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
அந்த பகுதியில் வந்த மற்ற வாகன ஓட்டிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் காயமடைந்த நண்பர்கள் 5 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜீவன், ரக்ஷ்னா உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.