மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மம்முட்டி தற்போது 'மாஸ்டர் பீஸ்' என்கிற படத்தின் படப்பிடிப்பில் படு பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். ஏற்கனவே மம்முட்டியை வைத்து 'ராஜாதிராஜா' என்கிற ஆவரேஜ் ஹிட்டை கொடுத்த அஜய் வாசுதேவ் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். ஆனால் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருப்பது என்னவோ 'புலி முருகன்' படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணா தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதியுள்ளார் என்பது தான்.
மாஸ் ஆக்சன் படமாக இது உருவாகிறது என்பதையும் படத்தில் சண்டைக்காட்சிகளுக்கு குறைவிருக்காது என்பதையும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்பதையும் படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் சொல்லாமல் சொல்கிறது..
ஆம்.. ஒன்றல்ல.. இரண்டல்ல.. கனல் கண்ணன், ஸ்டண்ட் சில்வா, சிறுத்தை கணேஷ், மாபியா சசி என தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்கள் நான்கு பேர் இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்கள். தற்போது கூட எர்ணாகுளத்தில் இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், மஹிமா நம்பியார், பூனம் பஜ்வா மற்றும் திவ்யா பிள்ளை என நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.