‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக பி.உன்னிகிருஷ்ணன் டைரக்சனில் உருவாகியுள்ள 'வில்லன்' மற்றும் லால் ஜாசின் டைரக்சனில் கல்லூரி கதையாக உருவாகியுள்ள 'வெளிப்பாடிண்டே புத்தகம்' என இரண்டு படங்களையும் நடித்து முடித்துவிட்டு ரிலாக்ஸ் ஆகியுள்ளார் மோகன்லால்.
இதில் வில்லன் படம் வரும் ஆகஸ்ட் இறுதியில் வெளியாக இருக்கிறது. தற்போது சிறிது ஒய்வு எடுத்துக்கொண்டு அடுத்ததாக உருவாகவுள்ள 'ஒடியன்' படத்திற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டு வருகிறார் மோகன்லால். விளம்பரப்பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப்படம் மிக பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.
இந்தப்படத்தில் பிளாக் மேஜிசியனாக நடிக்கும் மோகன்லால், 3௦ முதல் 65 வயது வரையான தோற்றங்களில் நடிக்க இருக்கிறார். இதற்காக தனது உடல் எடையை 15 கிலோ வரை குறைத்திருக்கிறார் மோகன்லால். ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக இருக்கும் இந்தப்படம் தனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கூறியுள்ளார் படத்தின் ஸ்டண்ட் இயக்குனரான பீட்டர் ஹெய்ன் மாஸ்டர்.
இந்தப்படத்தின் படப்படிப்பு வரும் ஆக-24 முதல் வாரணாசியில் துவங்குகிறது.. அதை தொடர்ந்து ஐதராபாத், பாலக்காடு ஆகிய இடங்களிலும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.