மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கடந்த வருடத்தில் மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் பாடலான 'மின்னாமின்னிக்கும் காலம் வந்தாச்சு' என்கிற பாடலை பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் பாடியிருந்தார். 'கட்டப்பனையிலே ஹ்ருத்திக் ரோஷன்' என்கிற படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் கேரளாவில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இதை தொடர்ந்து இந்த வருடத்தில் மலையாள சினிமாவில் தனது முதல் பாடலாக மோகன்லாலின் 'ஒடியன்' படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார் சங்கர் மகாதேவன்.
அறிமுக இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கும் இந்தப்படத்திற்கு எம்.ஜெயச்சந்திரன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்தப்படத்தின் பாடல் பதிவு நடைபெற்றது. இதுவரை மலையாளத்தில் 61 பாடல்களை பாடியுள்ள சங்கர் மாகதேவன் இதற்கு முன்பு மிஸ்டர் பிராட், கிறிஸ்டியன் பிரதர்ஸ், சோட்டா மும்பை, சிகார் என மோகன்லாலின் நான்கு படங்களில் பாடியுள்ளார்.