‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பஹத் பாசில், துல்கர் சல்மான் என மலையாள திரையுலகில் நட்சத்திரங்களின் வாரிசு ஹீரோவாக களமிறங்கும் வரிசையில் அடுத்த நபராக கோதாவில் குதித்திருப்பவர் மோகன்லாலின் மகன் பிரணவ். தான் அறிமுகமாகும் முதல் படத்தின் முதலநாள் காட்சிக்காக இன்று கேமரா முன் நின்றார் பிரணவ். ஆம்.. அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் 'ஆதி படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது. 'த்ரிஷ்யம், 'பாபநாசம்' ஹிட் படங்களை இயக்கியவரும், பிரணவின் குருநாதருமான இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இந்தப்படம் ஒரு அறிமுக நாயகனுக்கேற்ற வகையில் ரொமான்ஸ் அல்லது காமெடி படமாக அல்லாமல் ரிவென்ஜ் த்ரில்லராக உருவாக இருக்கிறது. ஆக்சன் காட்சிகள் அதிகம் உள்ள இந்தப்படத்திற்காக சில மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிகளை எடுத்துக்கொண்டுள்ளார் பிரணவ். மேலும் 'பார்கோர்' எனப்படும் தாண்டோட்டத்திலும் நிறைய நாட்கள் பயிற்சி பெற்றுள்ளாராம். குதித்ததில், தாவுதல், ஓடுதல், நீந்துதல் என அனைத்து வித பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் உபயோக்கிக்கும் வித்தைதான் இந்த தாண்டோட்டம். இந்தப்படத்தில் பிரணவின் தந்தையாக முகேஷ் நடிக்கிறார்.. மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விபரங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.