ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
மலையாளத்தில் பஹத் பாசிலை வைத்து 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்கிற ஹிட் படத்தை கொடுத்து, அதை தற்போது தமிழில் ரீமேக் செய்யவும் அனுப்பி வைத்துவிட்டார் இயக்குனர் திலீஷ் போத்தன். சமீபத்தில் பஹத் பாசிலுடன் அவர் இரண்டாவதாக கூட்டணி சேர்ந்த 'தொண்டிமுதலும் த்ரிக்சாட்சியும்' படமும் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுதவிர சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் திலீஷ் போத்தன்.
அடுத்து தனது மூன்றாவது படத்தில் துல்கர் சல்மான் அல்லது நிவின்பாலி போன்ற இளம் ஹீரோக்களுடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்த்தால், மம்முட்டியை வைத்து படம் இயக்கப்போகிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது. மகேஷிண்டே பிரதிகாரம் படத்திற்கு கதை எழுதிய ஷ்யாம் புஷ்கரன் தான் இந்தப்படத்திற்கும் கதை எழுத இருக்கிறாராம்.