Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நடிகராக ஜெயிப்பாரா மோகன்லால் மகன்

10 ஜூலை, 2017 - 12:25 IST
எழுத்தின் அளவு:
Did-Mohanlal-son-pranav-will-success-as-actor.?

மலையாள சினிமாவில் இது வாரிசுகளின் வரவுக்காலம். மம்முட்டி மகன் துல்கர் சல்மான் வெற்றிகரமான இளம் ஹீரோவாக வலம் வருகிறார். படத்திற்கு படம் புதிய முயற்சிகளை செய்கிறார். தொடர்ந்து அவரது படம் வெற்றி அடைகிறது. அதுபோல சீனிவாசன் மகன் வினித் சீனிவாசன், மலர்வாடி ஆர்ட் கிளப், தட்டத்தின் மறையத்து, ஒரு வடக்கன் செல்பி, ஜேக்கப்பிண்ட சுவராஜ்யம் என வெற்றிப் படங்களை தந்து கொண்டிருக்கிறார். அடுத்து ஜெயராம் மகன் காளிதாஸ் தமிழில் மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்தார். ஒரு பக்க கதை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது மலையாளப் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

இந்த வரிசையில் அடுத்து வருகிறார் மோகன்லால் மகன் பிரணவ். இவருக்கு நடிப்பை விட படம் இயக்குவதில் தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார். பாபநாசம், லைப் ஆஃப் ஜோசுட்டி படங்களில் வேலை செய்தார். இப்போது நடிகராகி விட்டார். ஜீத்து ஜோசப் இயக்கும் ஆதி படத்தில் நடித்து வருகிறார்.

பிரணவுக்கு நடிப்பு புதிதில்லை ஓனம், புனர்ஜனை படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதில் புனர்ஜனை படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில விருது பெற்றார். நடிகராக பிரணவ் ஜெயிப்பாரா அல்லது இயக்குனர் அவதாரம் எடுப்பாரா என்பதை ஆதியின் வெற்றி தீர்மானிக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in