‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
போகன் படத்திற்கு பிறகு ஹன்சிகாவின் மார்க்கெட் சரிந்து விட்டது போன்ற நிலை இருந்தபோதும், தற்போதும் அவர் கைவசம் மூன்று படங்கள் உள்ளன. மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் வில்லன், தமிழில் பிரபுதேவா நடிக்கயிருக்கும் குலேபகாவலி, தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் கெளதம் நந்தா ஆகிய படங்கள் உள்ளன. இதில் கோபிசந்துடன் நடிக்கும் தெலுங்கு படத்தில் இன்னொரு நாயகியாக கேத்ரின் தெரசா இருந்தபோதும், ஹன்சிகாவுக்கு முதன்மை நாயகி வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஞ்சா தெலுங்கு படத்தை இயக்கிய சம்பத் நந்தா இயக்கியுள்ள இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஜூன் 12-ந் தேதி கோபிசந்தின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் இந்த கெளதம் நந்தா படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கில் கைவசம் புதிய படங்கள் இல்லாத ஹன்சிகா, இப்படம் ஹிட்டடித்தால் தெலுங்கு சினிமாவில் மீண்டும் அழுத்தமாக காலூன்றி விடலாம் என்று இப்படத்தின் ரிலீசை எதிர்நோக்கியிருக்கிறார்.